King Rockers Network

King Rockers Network

Breaking News

https://ptm-cms-images.sgp1.cdn.digitaloceanspaces.com/uploads/news-image/2023/03/23/800x400/172405.webp"நான் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி, வெளியே சொல்லிடாதீங்க"- விசாரணையில் வெளியான தகவல்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டு சம்பவம் முக்கிய குற்றவாளி ஈஸ்வரி தனது வீட்டில் அரங்கேற்றிய நாடகம். அது குறித்த செய்தி தொகுப்பு.


சோழிங்கநல்லூரில் வாங்கிய வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வாங்கியதாகவும் வெளி உலகத்திற்கு இது நமது வீடு எனவும் உண்மையில் இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு சொந்தமானது எனவும் கூறி இது குறித்து யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது என கணவரிடம் கூறியுள்ளார்.

image

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இருவர் தேனாம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஈஸ்வரிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4கி லோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு சொத்து ஆவணங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட வெங்கடேசனிடம் ரூ.9 லட்சம் ஈஸ்வரி கொடுத்துள்ளார் என்ற தகவல் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் வெங்கடேசனிடம் கொடுக்கப்பட்ட ரூ. 9 லட்சம் பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஈஸ்வரி தனது கணவர் அங்கமுத்து பெயரில் வங்கி கணக்கில் அடகு வைத்துள்ள 350 கிராம் தங்க நகைகளை மீட்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஈஸ்வரியின் திருட்டு சம்பவத்துக்கு அவரது கணவர் அங்கமுத்து உதவி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் ஈஸ்வரி திருடியது மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது என எதுவும் அங்கமுத்துக்கு தெரியாத வகையில் ஈஸ்வரி செயல்பட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது குறித்து ஈஸ்வரி தனது வீட்டில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அதில் சோழிங்கநல்லூரில் வாங்கிய வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வாங்கியதாகவும் வெளி உலகத்திற்கு இது நமது வீடு எனவும், உண்மையில் இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு சொந்தமானது எனவும் கூறி இது குறித்து யாரிடமும் வெளியில் சொல்லக்கூடாது எனவும் கூறியுள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் ஈஸ்வரி செயல்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/wyVEil9
via

No comments