King Rockers Network

King Rockers Network

Breaking News

https://ift.tt/G0LTu2h மணிநேரத்துக்கும் அதிகமாக தூங்குபவரா நீங்கள்?.. பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்!

ஒவ்வொரு தனிநபரின் தினசரி வாழ்க்கையில் மிக முக்கியமானது மற்றும் இன்றியமையாத ஓர் அங்கம் தூக்கம். உடல் ஓய்வு பெறவும், ஹார்மோன்கள் சமநிலையடையவும் தினசரி குறைந்தது 6 மணிநேரமாவது தூங்குவது அவசியம். இருப்பினும் தேவையான தூக்கம் என்பது தனிநபர் மற்றும் வயதை பொருத்து மாறுபடுகிறது. நிறையப்பேர் தூக்கமின்மையால் அவதிப்பட்டாலும், சிலர் அதிக நேரம் தூங்குவதை விரும்புகின்றனர். என்றாவது ஒரு நாள் அதிகநேரம் தூங்குவது உடலுக்கு நல்லது என்றாலும், தினமும் அப்படி தூங்குவது உடலுக்கு பல வழிகளில் தீமைகளையே ஏற்படுத்தும். ஒரு தனிநபர் அதிக நேரம் தூங்கினால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை சரிசெய்வது அவசியமாகிறது.

அதிக தூக்கத்தால் ஏற்படும் பக்கவிளைவுகள்

தலைவலி

அதிகநேரம் தூங்குவது தலைவலிக்கு வழிவகுக்கிறது. தினசரி தூங்கும் நேரத்தைவிட அதிக நேரம் தூங்குவதால் நியூரோட்ரன்ஸ்மிட்டர்ஸில் தாக்கங்களை ஏற்படுத்தி தலைவலிக்கு வழிவகுக்கிறது. அதேபோல் பகலில் அதிகநேரம் தூங்குவது இரவுநேர தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுவும் தலைவலிக்கு காரணமாகிறது.

image

உடற்பருமன்

அதிக நேரம் தூங்குவது உடற்பருமனுக்கு வழிவகுக்கிறது. ஒருநாளில் 7-8 மணிநேரத்துக்கும் அதிகமாக தூங்குவது உடல் எடை அதிகரிப்பை தூண்டுகிறது. அதேபோல் தேவைக்கு குறைவாக தூங்குவதும் உடற்பருமனுக்கு வழிவகுக்கும் என்பதை மறக்கவேண்டாம். எனவே தினசரி உடலுக்கு தேவையான தூக்கத்தை கொடுப்பது அவசியம்.

டைப் 2 டயாபட்டிஸ்

தேவைக்கு அதிகமாக தூங்குவது டைப் 2 டயாபட்டிஸுக்கு வழிவகுக்கும். உடற்பருமன் அதிகமாக இருப்பவர்கள் அதிக நேரம் தூங்கினால் அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே தினசரி தூங்கும் நேரத்தில் கருத்தில்கொள்வது அவசியம்.

image

இதய நோய்கள்

அதிக நேரம் தூங்குவது இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. உடலின் தேவைக்கு அதிகமாக தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதயநோய்கள் மற்றும் அதீத தூக்கம் இரண்டிற்கும் இடையே நேரடி தொடர்பு இல்லையென்றாலும், தினசரி 7-8 மணிநேரம் தூங்குபவர்களைவிட 11 மணிநேரம் தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

மன அழுத்தம்

மன அழுத்தத்தால் அவதிப்படும் பெரும்பாலானவர்களுக்கு இன்சோம்னியா என்கிற தூக்கமின்மை பிரச்னை இருந்தாலும், குறிப்பிட்ட சிலர் அதிக நேரம் தூங்குகின்றனர். அதிக நேரம் தூங்குவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்பதால் தினசரி தூக்க அளவை கவனத்தில் கொள்ளவேண்டும். வேண்டுமானால் மருத்துவரை அணுகி தூக்க நேரத்தை குறைப்பதற்கான வழிகளை கேட்டறியலாம்.

வயதிற்கு ஏற்றார்போல் ஒருவருக்கு சராசரியாக எத்தனை மணிநேர தூக்கம் அவசியம்?

0-3 மாதங்கள் - 14-17 மணிநேரம்
4-12 மாதங்கள் - 12-16 மணிநேரம்
1-2 வயது - 11-14 மணிநேரம்
3-5 வயது - 10-13 மணிநேரம்
6-12 வயது - 9-12 மணிநேரம்
13-18 வயது - 8-10 மணிநேரம்
18 - 60 வயது - 7 மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக
61-64 வயது - 7-9 மணிநேரம்
65 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டோர் - 7-8 மணிநேரம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/GKAfM9U
via

No comments